Tuesday, October 13, 2009

மீண்டும்

ஒரு மெகா இடைவெளி விழுந்து விட்டது. எழுதும் ஆர்வம் சுத்தமாக இல்லை... கொஞ்ச நாளுக்கு முன்பாக வந்து இருந்த ஒரு சில பதிவுகளையும் அழித்து விட்டு சென்றேன்..

சில இழப்புக்கள்...நிறைய தவறுகள்...தொடர்ச்சியாக அதில் நான் கற்று கொண்ட பாடங்கள் என வாழ்க்கை சுவாரசியமாக தான் சென்று கொண்டு இருக்கீறது.....

பாம்பின் வாழ்நாள் முழுவதும் ஒரு சம்பவம் அடிக்கடி நடக்கும்..கால இடைவெளி தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லலாம்.. பாம்பு அதன் தோலை ஒரு குறிப்பிட கால இடைவெளி விட்டு தனக்கு தான் நீக்கி விடும்.. பின்பு மீண்டும் அந்த தோல் வளர்ந்து என்று தொடர்ந்து நடக்கும் ஒரு விஷயம்...

வாழ்வில் சில விசயங்களும் அப்படி தான்... நாம் முழுவதும் நீக்கி, முழுவதும் விலகி, முழுவதும் உரித்து போட்டு விட்டதாக நினைத்தவை மீண்டும் வளர்ந்து நிற்கும் போது....

ஒன்று அதோடு வாழ பழகி கொள்கிறோம்... அல்லது அவைகளை வளராமல் தடுக்கும் வழிகளை கண்டு அறிகிறோம்....

மொத்தத்தில் நமக்கு கொடுக்கப்பட தேர்வு இரண்டு தான்... அவைகளோடு வாழ்வது அல்லது அவைகள் இன்றி வாழ்வது... இந்த அவைகள் எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்...

கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் மீறப்படுவது ஒரு அறிவாக, திறமையாக கருதபடும் காலம் இன்று மட்டும் அல்ல மனிதன் படைக்கபட்ட அன்றே தோன்றி விட்டது போலும்...

"புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியை புசித்தாயோ என்றார்" ஆதி 3:11 

ஆதாம் மட்டும் அல்ல... நானும் இந்த வார்த்தைகளை எதிர் கொண்டு வாழ்கிறேன்... அவரை போல ஒளிந்து கொண்டு...

ஆனால் ....புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும்,.......இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருந்த பல இப்பொழுது இல்லை...

இன்றைக்கு நான் தடுமாறினாலும்.... ஒரு போதும் அவைகளோடு வாழ பழக போவது இல்லை...

உங்கள் தேர்வு???!!!!

ஜீவனுக்கு போகிற வாசல்.... அதை கண்டுபிடிக்கீறவர்கள் சீலர் மத் 7:14  

No comments: