Thursday, March 31, 2011

விக்டோர் உய்கோ

விக்டோர் உய்கோ 

இவர் ஒரு பிரெஞ்சு கவிஞர்... இவர் கிறிஸ்துவை அறிந்தவரா??... இவரின் பின்புலம் ஏதும் அறியும் ஆர்வம் எனக்கு இல்லை... ஆனால் இவரின் சில கவிதை வரிகள் கிறிஸ்தவர்களாகியா நாம் பல சமயங்களில் மறந்து விடும் காரியங்களை அழுத்தமாக சொல்வது....

ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும்....இவர் கிறிஸ்துவை அறியாத ஒருவராய் இருந்தால் நாம் வெட்கபட தான் வேண்டும்...

 அன்பு,நேர்மை இந்த பண்புகளை இழந்து நிற்கும்...அல்லது தங்களின் ஆவிக்குரிய, உலக வாழ்வின் உயர்வை காணும் போது தங்களை சமரசம் செய்து கொள்ளும் கிறிஸ்தவர்கள் அதிகமாய் போய் விட்டது ஆச்சரியமே....

சில கவிதை வரிகள்....

"நல்லவனாக இருப்பது எளிது. நேர்மை உள்ளவனாக இருப்பது தான் கடினம்...."

:உண்மையான நண்பனாக அல்லது உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ பாதி நம்பிக்கை உடையவனாகவோ இருக்காதே. "

"ஐந்தாம் மாடியிலிருந்து ஒரு பூச்சாடியை உங்கள் தலைமேல் போடும் மனிதர்கள் உண்டு. ஆனால் அவர்கள் சொல்லுவது உங்களுக்கு நான் இந்த ரோஜாப்பூக்களை அளிக்கிறேன் என்பது..."  

அவர் எழுதிய கடைசி வார்த்தை ""நேசித்தல் என்பது செயலாற்றல்." 


நன்றி - தமிழச்சி

Tuesday, March 29, 2011

காலம்....பாதை..

காலம்....பாதை...

காலம் நம் கரங்களில் இல்லைதான்... ஆனால் போகும் பாதை கூட உன் கரங்களில் இல்லை என்றால்????....

கண்ணை கட்டி காட்டில் விட்டது போல என்பார்கள்....உன் கண் முன் காண்பது காடு மட்டுமாக இருந்தால்???...

இப்படி எல்லாம் யாருக்கும் புரியாமல் எதாவது எழுதி கொண்டு இருக்க முடிவு செய்து பிறகு அது வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்....

பொழுது போகாமல் எழுதிய ஒரு பதிவு....




Thursday, October 7, 2010

அப்பா...

 
எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது...

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
 
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..? 

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு....

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்... 

இது யார் எழுதியது என்று தெரியவில்லை... ஒரு மின் அஞ்சலில் படித்த போதும் மட்டும் அல்ல எப்போது படித்தாலும் கண்களின் ஓரங்கள் ஈரமாகின்றன. எனக்காக எழுதியது போல ஒரு உணர்வு. எனக்காக தன் சந்தோசங்களை தியாகம் செய்ய துளியும் யோசித்து என் அப்பாவை பார்த்தது இல்லை. 


அந்த கடைசி வரிகளை போல அவருக்கு என் நேசத்தை உணர்த்த முடியாமலே போய் விட்டது....


(அன்பு) சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருகாலும் ஒழியாது 1 கொரி 13 :7 , 8



 
      

Sunday, April 11, 2010

அரண்..

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.



மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….



மானம்..உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு...



அறுவடை..திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது..



மந்தை..மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…நீ என்றேன்
கைதட்டினான்...



தாஜ்மஹால்..காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?....



அரண்..என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்....



காசி



Monday, October 26, 2009

எதிலும் முனைப்பின்றிச்

எதிலும் முனைப்பின்றிச்

சோம்பலாய் இருக்கிறேன்.

தன்னைத்தானே பார்த்துக் கொள்ளட்டும்

என விட்டுவிட்டேன் உலகத்தை.

பத்து நாட்களுக்கான அரிசி

என் பையில் இருக்கிறது.

கணப்பருகில் ஒரு கட்டுச் சுள்ளிகள்.

எதற்குத் தொணதொணப்பு

மாயையையும் ஞானத்தையும் பற்றி?

கூரையில் வீழும்

இரவுநேர மழையைச் செவிமடுத்தபடி

வசதியாக அமர்ந்திருக்கிறேன்,

கால்கள் இரண்டையும் நன்கு நீட்டி.



- ட்டய்கு ரியோக்கன்

Friday, October 23, 2009

அவர் யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்கு பைத்தியமாயும்

.....அவர் (இயேசு கிறிஸ்து) யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்கு பைத்தியமாயும் இருக்கிறார். 1 கொரிந்தி 1:23

கல்வி அறிவு கொஞ்சமும் இல்லாத மக்கள் மிக எளிமையாக அணுக முடிந்த இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் வேறு வீதமாக தெரிகிறார்...

தாம் தெரிந்து கொண்ட மக்களை எப்படியும், எந்த வழி கொண்டும் சந்திக்கும் அவரை, இங்கு பவுல் மிக வித்தியாசமான பார்வைக்குள் வைக்கபடுவதை காண்பிக்கிறார்...

ரட்சிப்பின் அடிப்படை, தூண், அடித்தளம் எல்லாம் சிலுவை இல் அடிக்கப்பட்ட இயேசு மட்டும் தான்...

ஆனால் இங்கு நாம் காண்பது என்ன??!!!
யூதர்கள் சிலுவை இல் அடையாளத்தை தேடி கொண்டு இருந்தார்கள்... மனுஷ குமாரன் மரிக்க வேண்டிய வீதம் இப்படி தான் என்று தெளிவாக அவர்கள் கைகளில் இருந்த பழைய ஏற்பாடு ஆகமங்கள் தெளிவாக குறிப்பிட்டு இருந்தாலும்... இயேசு தாமே பல முறை கூறி இருந்தாலும்....
பவுல் பீரசங்கம் செய்த சிலுவை இல் அடிக்கப்பட்ட இயேசுவில் அவர்கள் தாங்கள் எதிர்பார்த்த அடையாளத்தை காணவில்லை...

அதுவே அவர்களுக்கு இடறலாயும் ஆகியது...
வானந்திரத்தில் மோசே மூலமாக நடத்தப்பட்ட எல்லா அடையாளங்கள் கண்டும் விசுவாசிக்க யோசித்த மக்களின் வழி வந்தவர்கள்....எளிமையாய், அவமானம் அனைத்தும் தாங்கி கொண்டு, இரத்தம் முழுவதும் வடிந்தவராய், தனிமையாய் தொங்கி கொண்டு இருக்கும் ஏசுவை பற்றிய பீரசங்கத்தை வீசுவசிப்பது மிக கடினமே...
அடுத்த பதிவில் தொடரும்...






இயேசு கிறிஸ்துவும், நானும்

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அழைப்பை நான் ஏற்று கொண்ட போது என்னுடைய Teen age பருவத்தில் இருந்தேன்... வாலிப வயது, பெற்றோரின் அதிகமான செல்லம் இப்படி பல விசயங்கள்... இயேசுவின் அன்பையும், பரிசுத்த ஆவியானவரின் அபிசேகத்தையும் உதறி விட்டு உலகின் சிற்றின்ப பாதைகள் நோக்கி போக செய்தது...


அடித்தும் திருத்த முடியாத... அன்பாலும் திருத்த முடியாத ஒரு மகனாய் நான் இருந்த காலம் அது...


இயேசு கிறிஸ்துவின் பொறுமையை மிக மிக சோதித்த மகன்களில் நானும் ஒருவன்... ஒரு நொடி பொழுதில் அவர் என்னை அழிவுக்கு கொடுத்து இருக்கலாம்... ஆனால் பாவிகளில் மகா பாவியாகிய எனை விடுவித்து இரசிப்பது அவர் சித்தமாம்...


அவர் கண்களின் கிருபை கிடைத்தால்...அது இப் புவியில் பாக்கீயமே...

இயேசு கிறிஸ்து உடன் என் அனுபவங்களை சிறு சிறு பதிவுகளை போடலாம் என்று திட்டம்... இது அந்த பதிவு Series இல் முதலாவது...

மீண்டும் சந்திப்போம் மக்கள்ஸ்....